விஷூ பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2019      ஆன்மிகம்
Sabarimala Ayyappan 2019 04 11

திருவனந்தபுரம் : சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 19-ம்தேதி வரை படி பூஜைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் 10 நாட்கள் நடைபெறும்.

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டினார். நேற்று முன்தினம் இரவு மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. நேற்று அதிகாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம், உதயாஸ் தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ரகலச பூஜை உள்ளிட்ட பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.

வரும் 15-ம் தேதி விஷூ பண்டிகையை முன்னிட்டு, அதிகாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து பக்தர்களுக்கு விஷூக்கனி காண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாரம்பரிய முறைப்படி, அன்றைய தினம் ஐயப்ப பக்தர்களுக்கு தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் விஷூ கை நீட்டமாக நாணயங்களை வழங்குவார்கள். 10 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் வரும் 19-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு கோவில் நடை திறப்பதையொட்டி, சபரிமலை, பம்பை, நிலக்கல், இலவுங்கல் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை மே மாதம் 14- ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 19- ம் தேதி வரை 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து