முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வாக்காளர் விழிப்புணர்வு அஞ்சல் வில்லைகளை தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் வெளியிட்டார்

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2019      தேனி
Image Unavailable

 தேனி,- பாராளுமன்ற பொதுத்தேர்தல் - 2019 மற்றும் 198.ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி மற்றும் 199.பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவினை உறுதி செய்திடும் பொருட்டு பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தேனி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் ரூ.5 மதிப்பிலான வாக்காளர் விழிப்புணர்வு அஞ்சல் வில்லைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ம.பல்லவி பல்தேவ்,  வெளியிட்டார்.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் “நேர்மையாக வாக்களிக்க வாக்காளர்களின் உறுதிமொழியினை” தேனி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையின் மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சிகளை தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவத்ததாவது,
பாராளுமன்ற பொதுத்தேர்தல் - 2019 மற்றும் 198.ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி மற்றும் 199.பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதிகள் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவினை உறுதி செய்திடும் பொருட்டு பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் வாக்காளர் பிராச்சார வாகனம், மகளிர் சுய உதவிக்குழுவினரின் ரங்கோலி, ராட்சச பலூன் பறக்க விடுதல், மெஹந்தி திருவிழா, மாதிரி வாக்குப்பதிவு மையம் அமைத்தல், வாக்காளர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரின் கடிதம் அனுப்புதல், வாகனங்களில் விழிப்புணர்வு பேரணி, எரிவாயு சிலிண்டர்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டுதல், கல்லூரி மாணவர்களின் குடயளா ஆழடிஇ வணிக நிறுவன பைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் வெளியிடுதல், பெட்ரோல் விற்பனை நிலைய பணியாளர்களுக்கு விழிப்புணர்வு டீ சர்ட் வழங்குதல், மாணவ, மாணவியர்களின் உருவங்கள் அடங்கிய விழிப்புணர்வு மாணவ, மாணவியர்களின் மனித சங்கிலி கையெழுத்து இயக்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்தொடர்ந்து, இன்று (11.04.2019) ரூ.5 மதிப்பிலான வாக்காளர் விழிப்புணர்வு அஞ்சல் வில்லைகளை வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட நகர்ப்புறப்பகுதிள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் அனைத்துத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து மாதிரி வாக்குச்சாடி மையங்கள் அமைக்கப்பட்டு கட்டுப்பாட்டு கருவி, வாக்குப்பதிவு இயந்திரங்கள், (ஏஏPயுவு) யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதிசெய்யும் இயந்திரங்களை கொண்டு வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தங்களது வாக்குப்பதிவினை பதிவு செய்திடும் பொருட்டு, மாற்றுத்திறனாளிகள் எளிதில் வாக்களித்திட சாய்தள வசதி, வீல்சேர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கல்லூரியில் பயிலுகின்ற மாணவ, மாணவியர்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். படித்தவர்கள் தேர்தலில் பங்கு கொண்டு வாக்களிப்பதன் மூலம் உண்மையான ஜனநாயகம் மலர வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, கல்லூரி மாணவ, மாணவியர்கள் வாக்களிப்பதின் அவசியத்தினை உணர்ந்து கட்டயமாக வாக்களித்திட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர்                 திருமதி ம.பல்லவி பல்தேவ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையின் முதல்வர் மரு.ஆர்.ராஜேந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மு.சாந்தி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) எம்.ஆர்.கண்ணகி, தேனி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆர்.சுவாமிநாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.செந்தில் அண்ணா, தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மரு.எம்.இளங்கோவன், மருத்துவ அலுவலர் மரு.எஸ்.ராதா   உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து