முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் பகுதியில் மாம்பழ சீசன் தொடக்கம்

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2019      திண்டுக்கல்
Image Unavailable

நத்தம் - திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மாந்தோப்புகள் உள்ளன.இந்த வருடம் கடுமையான வறட்சியின் காரணமாக மா விளைச்சல் தேவையான மழை பெய்யாமல் போனதால்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆண்டுதோறும் மார்ச் மாத கடைசியில் மாம்பழ சீசன் தொடங்கும்.இந்த வருடம் போதுமான ஈரம் பூமியில் இல்லாத காரணத்தால் மா விளைச்சலில் பின்னடைவு ஏற்பட்டு இந்த மாதம் தற்போது அறுவடை தொடங்கியுள்ளது. முதன் முதலாக பாலாமணி மாம்பழ ரகம் நத்தம் சுற்றுவட்டார கிராமங்களில் அறுவடையாகி சந்தைக்கு வந்துள்ளது.  இந்த பழம் 1 கிலோ மொத்த விலைக்கு ரூ.50க்கும் அதே பழம் சில்லரையாக ரூ.80க்கும் விற்பனையாகிறது. தற்போது வரும் இந்த மாம்பழம் இனிப்பும், துவர்ப்பும் வாசமும் நிறைந்துள்ளது. மருத்துவகுணம் நிறைந்த மாம்பழம் நத்தத்தில் கிராக்கியாக
விலைபோகிறது. மா விவசாயிகள் இதுகுறித்து கூறியதாவது இந்த வருடம் இயற்கையின் ஒத்துழைப்பு இல்லாமல் பருவமழை பொய்த்துவிட்டது. ஆங்காங்கே ஆழ்குழாய் கிணறு மூலம் வெளியேற்றப்படும் தண்ணீரால் மட்டுமே மாமரங்கள் பாதுகாக்கப்படுகிறது. அந்த மாமரங்கள் மட்டுமே விளைச்சலை தந்துள்ளது. மற்ற மரங்கள் விளைச்சல் இன்றிகாணப்படுகிறது. இந்த மாம்பழ சீசன் வருகிற ஜுன் மாதம் வரை நீடிக்கும், பாலாமணியை தொடர்ந்துகல்லாமை,காசா,இமாம்பசந்து, சப்பட்டை உள்ளிட்ட பல்வேறு மாம்பழரகங்கள் அடுத்தடுத்து அறுவடைக்கு வரும். கடந்த சில மாதங்களாக மழையேபெய்யவில்லை. இதனால் மாமரங்களுக்கு தேவையான நீர்ச்சத்து இல்லாமல்பட்டுப் போய்விட்டது.இவ்வாறு அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
--

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து