விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு 5 வருட சிறை கிடைக்கலாம்?

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2019      உலகம்
WikiLeaks founder Julian Assange 2019 04 12

லண்டன், விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெறலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். ஜூலியன் அசாஞ்சே மீது ஸ்வீடனில் பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் இருந்த நிலையில் அவரை லண்டன் போலீஸார் கைது செய்தனர். ஈக்வடார் அரசு அசாஞ்சேவுக்கு வழங்கிய அடைக்கலத்தை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து அவர் தூதரக அதிகாரிகளால் அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அசாஞ்சே வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லபட்டார்.

நீதிமன்றத்தில் அசாஞ்சே சரணடையத் தவறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். மேலும், அமெரிக்க அரசின் ரகசியத் தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டையும் எதிர்கொள்ள இருக்கிறார். இதனால் அசாஞ்சே ஐந்து வருடம் சிறை தண்டனை பெறலாம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து