முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்துல்கலாம் தேசிய நினைவகம் அருகே வாக்காளர் விழிப்புணர்வு குறித்து 51 மணல் சிற்பங்கள் அமைப்பு.

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

   ராமேஸ்வரம்- நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், பேய்க்கரும்பில் அமைந்துள்ள டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் தேசிய நினைவகம் அருகே  வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கையாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை வலியுறுத்தும் விதமாக 51 மணல் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருந்ததை தேர்தல் அதிகாரிகள் உள்பட பொதுமக்கள் நேற்று பார்வையிட்டனர்.
  மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரான கொ.வீர ராகவ ராவ் செய்தியாளர்கள் சந்தில் தெரிவித்தது.
 
 தமிழகத்தில்  ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 100 சதவீத வாக்குப்பதிவு, என் வாக்கு விற்பனைக்கு அல்ல, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய இயந்திரம் ஆகியவற்றின் செயல்பாடு குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்றய தினம் ராமேஸ்வரம் பேய்க்கரும்பப பகுதியில் அமைந்துள்ள டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் தேசிய நினைவகம் அருகே வாக்காளர் விழிப்புணர்வை வலியுறுத்தும் விதமாக சுமார் 500 மீ நீளத்தில் தேர்தல் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள், வாக்குரிமையின் வலிமை போன்றவற்றை வலியுறுத்தும் விதமாக 51 மணல் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, மக்களாட்சி தத்துவத்தின் சிறப்பினை எடுத்துரைக்கும் பண்டைய சோழர் கால குடவோலை முறை, வாக்குரிமையின் வலிமை, அழியா மையின் ஆற்றல், 100 சதவீத வாக்குப்பதிவு, எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சாpபார்க்கக்கூடிய இயந்திரம் ஆகியவற்றின் செயல்பாடு குறுpத்த விழிப்புணர்வு, மாற்றுத்திறன் கொண்ட வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களித்திட ஏதுவாக சிறப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விசயங்களை வலியுறுத்தும் வகையில் மணல் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வினை   High Range Book of World Records அமைப்பின் மூலம் The Lengthiest Gallery of Sand Sculptures On Voters Awareness”  என சாதனை நிகழ்வாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.
   நிகழ்ச்சியில் தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், மீனவர் குழு உறுப்பினர்கள் அனைவரும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமலினி, இந்திய கடலோர காவல்படை கமாண்டர் எம்.வெங்கடேஷ், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் கோ.குருநாதன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சிவகாமி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவதாசன், மணல் சிற்பங்களை அமைத்த கலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் பா.சரவணன  High Range Book of World Records அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமதி.சைலஜா மஹாதேவன் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழு, மீனவக்குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து