களத்துல மட்டும் தான் மொறப்போம், வெளியில வெள்ளந்தியா சிரிப்போம் : ஹர்பஜன் சிங் ட்விட்

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2019      விளையாட்டு
Harbhajan Singh 2019 04 12

Source: provided

சென்னை : களத்துல மட்டும் தான் நாங்க மொறப்போம், நண்பா கொஞ்சம் வெளியில வந்துப்பாருங்க வெல்லந்தியா சிரிப்போம் என  ட்விட்டரில் ஹர்பஜன் பதிவிட்டுள்ளார்.

சி.எஸ்.கே. முதலிடம்...

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 100 ஐபிஎல் போட்டிகளில் வெற்றிபெற்ற முதல் கேப்டன் என்ற பெருமையை டோனி பெற்றார்.  இந்தத் தொடரில் இதுவரை 6 வெற்றிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்தில் இருக்கிறது.

வாக்குவாதம்...

நேற்று முன்தினம் இரவு நடந்த போட்டியில் கேப்டன் கூல் சற்று சூடானார். சென்னை வெற்றி பெற இறுதி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்டது. பரபரப்பாக வீசப்பட்ட அந்த ஓவரில் ஒரு பந்து இடுப்புக்கு மேல் வீசப்பட்ட நோ பாலாக முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர், இல்லை என அறிவிக்கப்பட்டது. இதை வெளியிலிருந்து பார்த்துகொண்டிருந்த டோனி களத்திற்குள் சென்று நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக டோனிக்கு ஒரு போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 50 சதவிதம் அபராதமும் விதிக்கப்பட்டது.

எங்களோட தர்பார்...

இந்நிலையில் போட்டி குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹர்பஜன், ''நாங்க வந்தது வேணும்னா ஜெய்பூரா  இருக்கலாம்,ஆனா அங்கேயும் எங்களோட தர்பார் தான். ஏற்றிவிட்ட ஏணிய நாங்க மறந்ததுமில்ல,சிஎஸ்கே தூள் கிளப்பாத இடமுமில்ல. களத்துல மட்டும் தான் நாங்க மொறப்போம், நண்பா கொஞ்சம் வெளியில வந்துப்பாருங்க வெள்ளந்தியா சிரிப்போம்'' என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து