சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2019      விளையாட்டு
Sindhu 2019 04 12

Source: provided

சிங்கப்பூர் : சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீன வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

சீன வீராங்கனை...

சிங்கப்பூரில் சர்வதேச பேட்மிண்டன் தொடர் கடந்த 4-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவைச் சேர்ந்த கய் யான்யான் உடன் மோதினார்.முதல் செட்டில் சிறப்பாக விளையாடிய சிந்து, அந்த செட்டை 21-13 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றினார். ஆனால், 2-வது செட்டை 17-21 என்ற புள்ளிகள் கணக்கில் அவர் இழந்தார்.

அரையிறுதிக்கு...

பின்னர் சுதாரித்துக்கொண்ட சிந்து, வெற்றித்தை தீர்மானிக்கும் 3-வது செட்டில் ஆக்ரோசமாக விளையாடினார். அந்த செட்டை 21-14 என்ற புள்ளிகள் கணக்கில் அவர் தனதாக்கினார். இதன்மூலம், 2-1 என்ற செட் கணக்கில் போராடி வெற்றிபெற்ற சிந்து, அரையிறுதிக்கு முன்னேறினார்.

சாய்னா தோல்வி...

மற்றொரு காலிறுதி போட்டியில், இந்தியாவின் சாய்னா நேவால், ஜப்பானின் நஸோமி ஒகுஹரா உடன் மோதினார். தொடக்கம் முதலே தடுமாறிய சாய்னா, 8-21, 13-21 என்ற புள்ளிகள் கணக்கில் நேர்செட்டில் தோல்வி அடைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து