ஐ.பி.எல் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் : உளவு அமைப்புகள் எச்சரிக்கை.

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2019      விளையாட்டு
IPL Terror Alert 2019 04 12

Source: provided

புதுடெல்லி : ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் அளித்துள்ள தகவலை அடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சதித்திட்டம்...

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 23-ம் தேதி முதல் அடுத்த மாதம் 12-ம் தேதி வரை (மார்ச் 23 - மே 12) இந்தியாவில் நடைபெறுகிறது. இதில், ஏராளமான வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக சில உளவு அமைப்புகள் தகவல் அளித்துள்ளன. குறிப்பாக, மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பலத்த பாதுகாப்பு...

இதனால், கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ள நட்சத்திர விடுதிகள் மற்றும் மைதானங்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வீரர்கள் பேருந்தின் மூலம் மைதானத்துக்கு அழைத்து வரும்போது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால், அதற்கு கொடுக்கப்படும் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளன.ஏற்கனவே, இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் நேரத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் தகவல் அளித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து