முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரிய தலைவரை மீண்டும் சந்திக்க வாய்ப்பு: அதிபர் டிரம்ப்

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : வடகொரியா தலைவருடனான 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்த நிலையில், அவரை மீண்டும் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, கொரிய தீபகற்பம் அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றப்படும் என கிம் ஜாங் அன், டிரம்புக்கு உறுதி அளித்தார். இதையடுத்து, இருநாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவானது. வடகொரியா தனது வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை அடியோடு நிறுத்தியது.

இதற்கு கைமாறாக அமெரிக்கா தங்கள் மீது விதித்த பொருளாதார தடைகளை முழுமையாக திரும்பப் பெறவேண்டும் என வடகொரியா எதிர்பார்த்தது. ஆனால் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடாத வரையில் பொருளாதார தடைகளை திரும்பப்பெற முடியாது என்பது அமெரிக்காவின் நிலைப்பாடாக அமைந்தது.

இந்த விவகாரம் குறித்து பேசி சுமுக தீர்வுகாண டிரம்ப், கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் வியட்நாமில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த சந்திப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் இருநாட்டு உறவில் மீண்டும் விரிசல் ஏற்படும் சூழல் உருவானது.

இந்த நிலையில், கிம் ஜாங் அன்னுடன் 3-வது முறையாக சந்திப்பு நடைபெறலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப் இதனை தெரிவித்தார். அப்போது மூன் ஜே இன்னும் உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து