முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லைக் கதவை உடைத்துக் கொண்டு மெக்சிகோவிற்குள் நுழைந்த 350 அகதிகள்

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2019      உலகம்
Image Unavailable

மெக்சிகன் சிட்டி : கவுதமாலாவில் இருந்து திரண்டு வந்த அகதிகளில், சுமார் 350 பேர் வன்முறையில் ஈடுபட்டு எல்லைக் கதவை உடைத்துக் கொண்டு மெக்சிகோவிற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் அகதிகளாக ஊடுருவி வருகின்றனர். மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள ஹோண்டுராஸ், கவுதமாலா மற்றும் எல் சால்வடோர் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் நுழைகின்றனர். இதை தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக உள்ளார். அமெரிக்காவுக்குள் வெளிநாட்டினர் ஊடுருவதை மெக்சிகோ தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மெக்சிகோ எல்லை முழுவதையும் மூடி விடுவோம் என்று எச்சரித்தார். மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டவும் ஏற்பாடு நடைபெறுகிறது.

இந்நிலையில், கவுதமாலா நாட்டில் இருந்து சுமார் 2500 அகதிகள் நேற்று முன்தினம் அதிகாலை மெக்சிகோவிற்கு வந்தனர். அவர்களை நாட்டிற்கு விடாமல் மெக்சிகோ எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். எல்லைக் கதவு மூடப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சிலர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். மெக்சிகோவிற்குள் நுழைந்த சுமார் 350 பேரையும் போலீசார் தடுத்ததால் கடும் வன்முறையில் ஈடுபட்டனர். தெற்கு நகரமான மெடாபா டி டாமிங்கஸ் நகரில் உள்ள ஒரு காவல் நிலையத்தை தாக்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எல்லையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு அகதிகள் கட்டுப்படுத்தப்பட்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து