ஆப்கனில் கடும் சண்டை ராணுவ தாக்குதலில் 27 தலிபான்கள் பலி

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2019      உலகம்
Afghan  military 2019 04 14

காபூல், ஆப்கானிஸ்தானின், நங்கர்ஹார் மாகாணத்தில் ஷிர்ஜாத் மாவட்டத்தை கைப்பற்றும் நோக்கத்தில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடுத்தனர். இதில் அந்த நாட்டின் ராணுவம் உஷாராகி எதிர் தாக்குதல் தொடுத்தது. இந்த தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் நிலை குலைந்து போயினர். தாக்குதல் முடிவில் 27 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகினர். 25 பேர் படுகாயம் அடைந்தனர்.  இந்த மோதலின் போது ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் 2 பேர் பலியாகினர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். 

மோதலைத் தொடர்ந்து தலிபான்கள் ஓட்டம் பிடித்து விட்டனர். அதனால் ஷிர்ஜாத் மாவட்டத்தை கைப்பற்றும் தலீபான் பயங்கரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், பாக்லான் மாகாணம், பாக்லான் இ மர்காஜி மாவட்டத்தில் சோதனைச்சாவடி ஒன்றை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஆப்கானிஸ்தான் படையினர் 8 பேர் பலியாகினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து