சிவில் சர்வீஸ் தேர்வில் 12-வது இடம் பிடித்த இளம்பெண்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2019      இந்தியா
Namrata Jain  Civil Service Exam 2019 04 14

புதுடெல்லி, நக்சலைட்டுகள் பாதித்த சத்தீஷ்கரின் தன்டேவாடா பகுதியை சேர்ந்த இளம்பெண் சிவில் சர்வீஸ் தேர்வில் 12-வது இடம் பிடித்துள்ளார்.

மத்திய அரசால் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான முடிவுகள் கடந்த 5-ம் தேதி வெளியானது. இதில் கனிஷக் கட்டாரியா என்பவர் முதல் இடம் பிடித்துள்ளார். இந்த தேர்வில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஷ்கரின் தன்டேவாடா மாவட்டத்தின் கீடம் நகரை சேர்ந்த இளம்பெண் நம்ரதா ஜெயின் என்பவர் 12-வது இடம் பிடித்துள்ளார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வில் 99-வது இடம் பெற்றவர். இவரது தந்தை உள்ளூரிலேயே தொழிலதிபராக உள்ளார். தாயார் வீட்டு பணிகளை கவனித்து கொள்கிறார். இவரின் சகோதரர் பட்டய கணக்காளராக வர விரும்புகிறார்.

இது குறித்து அவர் கூறும் போது, ஆட்சியராக வரவே எப்பொழுதும் நான் விரும்பினேன். நான் வசிக்கும் பகுதி நக்சலைட்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி. இங்குள்ள மக்கள் கல்வி போன்ற அடிப்படை வசதியின்றி உள்ளனர். எனது மாநில மக்களுக்காக சேவையாற்ற நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து