முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாழ்வில் எல்லா வளங்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும்: முதல்வர் எடப்பாடி விஷு தின வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, வாழ்வில் எல்லா நலங்களையும், வளங்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் விஷூ தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,    மலையாள புத்தாண்டு தினமான “விஷு” திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த விஷு திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

புத்தாண்டு தினமான விஷு திருநாளன்று, மலையாள மொழி பேசும் மக்கள், அதிகாலை கண் விழித்து அரிசி, காய்கனிகள், கண்ணாடி, கொன்றை மலர்கள், தங்க நாணயங்கள் ஆகியவற்றை கொண்டு அலங்கரிக்கப்பட்ட விஷுக்கனி கண்டு, மலரும் இப்புத்தாண்டு தங்கள் வாழ்வில் குறைவற்ற  செல்வத்தையும், அளவற்ற மகிழ்ச்சியையும் வழங்க  வேண்டும் என்று இறைவனைத் தொழுது, உற்றார் உறவினர்களுடன் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டு, அறுசுவை விருந்துண்டு உற்சாகமாக “விஷு” தினத்தை கொண்டாடி மகிழ்வார்கள்.  இப்புத்தாண்டு மக்களின் வாழ்வில் எல்லா நலங்களையும், வளங்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, மீண்டும் ஒருமுறை மலையாள மொழி பேசும் மக்களுக்கு எனது இனிய விஷு திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்  கொள்கிறேன் என்று அந்த வாழ்த்து செய்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து