உள் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2019      தமிழகம்
Chennai Meteorological Center2018-08-05

சென்னை, உள் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

12 மாவட்டங்களில்...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகமூட்டத்துடன்...

மேலும் சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகப்பட்சமாக 36 டிகிரி செல்சியசும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியசும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து