விருதுநகர் தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் ஆர்.அழகர்சாமியை ஆதரித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீவிர பிரச்சாரம்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2019      தமிழகம்
Uthayakumar 2019 04 14

Source: provided

திருமங்கலம் : விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் ஆர்.அழகர்சாமியை ஆதரித்து திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் நகரம் மற்றும் திருமங்கலம், கள்ளிக்குடி,டி. கல்லுப்பட்டி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில்தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர், கழக அம்மா பேரவை செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு அலைகடலென திரண்டிருந்த பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்து உரையாற்றினார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 18ம் தேதி நாடாளுமன்ற பொதுதேர்தல் நடைபெறுகிறது.தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தமிழகமெங்கிலும் சூடுபிடித்து வருகிறது.இந்நிலையில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கொளுத்திடும் கோடைவெயிலுக்கு மத்தியிலும் அனல் பறக்கும் பிரச்சாரம் அதிரடியாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பாரம்பரியம் மிக்க விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளராக தே.மு.தி.க.வைச் சார்ந்த ஆர்.அழகர்சாமி போட்டியிடுகிறார். சாமானிய வேட்பாளரான அழகர்சாமி, அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளின் துணையுடன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களை நேரில் சந்தித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தமிழ் புத்தாண்டு தினமான நேற்று காலை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் ஒன்றியம் மறவன்குளம் பகுதியில் அ.தி.மு.க கூட்டணியின் சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் ஆர்.அழகர்சாமியை ஆதரித்து மறவன்குளம் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜையுடன் சூறாவளி பிரச்சாரம் தொடங்கியது.தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்கழக அம்மா பேரவை செயலாளர்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் துவங்கிய இந்த பிரச்சார பயணத்திற்கு தே.மு.தி.க மாவட்டச் செயலாளர் கணபதி,திருமங்கலம் அ.தி.மு.க ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல்.அன்பழகன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன்,ஒன்றிய அம்மா பேரவை தலைவர் தமிழழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.இதையடுத்து திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் தே.மு.தி.க வேட்பாளர் ஆர்.அழகர்சாமியை ஆதரித்து கொளுத்தும் வெயிலில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து ஆரத்தி எடுத்தும் வெற்றி குலவையிட்டும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இதை தொடர்ந்து திருமங்கலம் நகரில் ராஜாஜி சிலை,தேவர் திடல் மற்றும் சந்தைப்பேட்டை பகுதிகளில் தே.மு.தி.க வேட்பாளர் ஆர்.அழகர்சாமியை ஆதரித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது திருமங்கலம் நகர் கழகச் செயலாளர் ஜே.டி.விஜயன்,நகர் அவைத் தலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் சதீஷ்சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருமங்கலம் நகரில் மூன்று இடங்களில் தொடர்ச்சியாக நடைபெற்ற பிரச்சார கூட்டங்களில் அலைகடலென திரண்டிருந்த மக்கள் மத்தியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எழுச்சிமிகு உரையாற்றி தோழமை கட்சியான தே.மு.தி.க.வின் வேட்பாளர் அழகர்சாமிக்கு ஆதரவு திரட்டினார்.அப்போது அதிக அளவிலான இஸ்லாமிய பெருமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்து தங்களது வாக்கு கொட்டும் முரசு சின்னத்திற்கே என்று குரலெழுப்பி உறுதி செய்தனர்.கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையிலும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் பிரச்சார கூட்டங்களுக்கு அதிகளவில் பொதுமக்கள் திரண்டு வந்திருந்த நிகழ்வு எதிர்கட்சியினரை கலக்கமடையச் செய்வதாக அமைந்தது.

அதன்படி நேற்று ஒரே நாளில் மட்டும் திருமங்கலம் நகரில் ராஜாஜி சிலை,தேவர் சிலை,சந்தைப்பேட்டை ஆகிய இடங்களிலும் திருமங்கலம் ஒன்றியத்திற்கு மறவன்குளம், உச்சப்பட்டி, கரடிக்கல், கீழக்கோட்டை, ஆலம்பட்டி ,மேலஉரப்பனூர், சாத்தங்குடி, நடுவக்கோட்டை, மேட்டுப்பட்டி ஆகிய கிராமங்களிலும்,கல்லுப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட டி.குண்ணத்தூர்,வன்னிவேலம்பட்டி,டி.கல்லுப்பட்டி-கள்ளிக்குடி சந்திப்பு, கல்லுப்பட்டி தேவர்சிலை,எம்.சுப்புலாபுரம்,கூவலப்புரம்,சந்தையூர்,பேரையூர் அரசமரம் சந்திப்பு,பேரையூர் ஆ.தி தெரு,கொல்லவீரம்பட்டி மற்றும் கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வில்லூர், புளியங்குளம், சித்தூர், தென்னமநல்லூர், கே.வெள்ளாகுளம், கள்ளிக்குடி சத்திரம், ஓடைப்பட்டி, சென்னம்பட்டி,குராயூர், சிவரக்கோட்டை, கரிசல்காளம்பட்டி. செங்கப்படை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மின்னல் வேக பிரச்சாரம் மேற்கொண்டு விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் ஆர்.அழகர்சாமிக்கு ஆதரவு திரட்டினார்.மேலும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் இந்த கூறாவளி சுற்றுப்பயண பிரச்சாரமும்,அவற்றில் அலைகடலென மக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்த நிகழ்வும் அ.தி.மு.க கூட்டணி கட்சியினருக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.

இந்த பிரச்சாரத்தின் போது அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் கள்ளிக்குடி மகாலிங்கம், கல்லுப்பட்டி ராமசாமி,பேரூர் கழகச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், நெடுமாறன், முன்னாள் யூனியன் துணை சேர்மன்கள் பாவடியான்,கண்ணன்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் அன்னலட்சுமி, பிரபுதங்கர், முன்னாள் பேரூராட்சி தலைவர் மாணிக்கம், திருமங்கலம் நகர் நிர்வாகிகள் ராஜாமணி, கலைச்செல்வன், சுரேஸ், இன்பம், சிவகுமார், சிவணான்டி,சந்திரன், மாதவன், முகேஷ்,ஆனந்த், மரக்கடைராஜா, வழக்கறிஞர்கள் முத்துராஜா, வெங்கடேஸ்வரன், திருமங்கலம் ஒன்றிய நிர்வாகிகள் அவைதலைவர் அன்னக்கொடி, துணை செயலாளர் சுகுமார், சுமதி சாமிநாதன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் உச்சப்பட்டி செல்வம்,பழனிச்சாமி, கீதாஆறுமுகம், பிச்சமணி, சாமிநாதன்,சிவன்காளை,கட்டாரி வேல்முருகன்,சிவஜோதி தர்மர்,பி.ஆர்.சி. ராதாகிருஷ்ணன், சிங்கராஜபாண்டியன்,ஜெய.சி.செல்வகுமார்,கொடிவைரன், சின்னன்,மீனாலட்சுமி,மற்றும் தே.மு.தி.க திருமங்கலம் நகர் கழகச் செயலாளர் ராதாகிருஷ்ணன்,துணை செயலாளர் சின்னசாமி,ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் திருமலைச்செல்வி, பா.ஜ.க.நிர்வாகி சசிகுமார் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து