மாயாவதி கட்சிக்கு, வங்கியில் ரூ.670 கோடி கையிருப்பு

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2019      இந்தியா
Mayawati 2019 04 15

Source: provided

புதுடெல்லி : பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் வங்கியில் அதிக பணத்தை கையிருப்பு வைத்து இருப்பது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியாகும்.

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் கடந்த நிதியாண்டில் எவ்வளவு செலவு செய்தன? வங்கியில் எவ்வளவு கையிருப்பு வைத்துள்ளன என்ற தகவலை தலைமை தேர்தலை ஆணையத்திடம் தெரிவித்துள்ளன.இந்த வரவு-செலவு கணக்கு தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி வங்கியில் அதிக பணத்தை கையிருப்பு வைத்து இருப்பது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியாகும். கடந்த ஆண்டு இந்த கட்சி 665 கோடி ரூபாயை கையிருப்பு வைத்து இருந்தது. இந்த ஆண்டு அந்த தொகை ரூ.670 கோடியாக உயர்ந்துள்ளது.

அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 2-வது இடத்தில் உள்ளது. அந்த கட்சிக்கு வங்கிகளில் ரூ.471 கோடி கையிருப்பு உள்ளது. வங்கியில் அதிக பணத்தை கையிருப்பு வைத்திருக்கும் கட்சிகளில் முதல் 2 கட்சிகளும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சி ரூ.196 கோடி கையிருப்புடன் 3-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சி ரூ.136 கோடியே வைத்திருந்தது. ஒரே ஆண்டில் 60 கோடி ரூபாயை வங்கியில் காங்கிரஸ் கட்சி சேர்த்துள்ளது.சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ரூ.107 கோடியுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி ரூ.82 கோடி கையிருப்புடன் 5-வது இடத்தில் உள்ளது.மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, ஆம்ஆத்மி ஆகிய இரு கட்சிகளும் தலா ரூ.3 கோடியை வங்கிகளில் கையிருப்பு வைத்துள்ளன.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து