தெலுங்கானாவில் நூதன முறையில் தங்கம் கடத்திய நபர் கைது

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2019      இந்தியா
Telangana-gold 2019 04-15

ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தங்கத்தினை உடையில் மறைத்து கடத்தி வந்த நபரை சுங்க அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஐதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை சுங்க அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தோகாவில் இருந்து வந்த பயணியின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.  இதையடுத்து அந்த நபரின் உடமைகளை முழுமையாக சோதனையிட்டனர். அப்போது  அந்த நபர், தங்கத்தை உருக்கி, பாலீத்தீன் பாக்கெட்டில் அடைத்து அதனை உடைக்குள்  மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி நூதனமான முறையில் கடத்தி  வரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.பிடிபட்ட தங்க பேஸ்ட் 1.16  கிலோ கிராம் எடை கொண்டது. இதன் மதிப்பு 36,99,782 ரூபாய் ஆகும். தங்கம் கடத்தி வந்த நபரை கைது செய்து, சுங்க அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து