மோடியை தோற்கடிக்க எதுவும் செய்ய தயார்: கெஜ்ரிவால்

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2019      இந்தியா
kejrwal 2018 11 27-

புதுடெல்லி, பிரதமர் மோடியையும், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவையும் தோற்கடிக்க எதுவும் செய்வோம். அவர்களை தோற்கடித்து, அவர்களிடம் இருந்து நாட்டை காப்பதற்கான எங்களது முயற்சி தொடரும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

முதல்கட்ட தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது குறித்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

நாடு தற்போது ஆபத்தில் உள்ளது. பிரதமர் மோடியையும், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவையும் தோற்கடிக்க எதுவும் செய்வோம். அவர்களை தோற்கடித்து, அவர்களிடம் இருந்து நாட்டை காப்பதற்கான எங்களது முயற்சி தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து