மீண்டும் அணியில் வார்னர், ஸ்மித்: உலகக்கோப்பை போட்டிகான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2019      விளையாட்டு
Warner 2019 04 15

Source: provided

மெல்போர்ன் : உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தடையில் இருந்த வார்னர், ஸ்மித் ஆகியோர் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளனர்.

இங்கிலாந்தில் அடுத்த மாதம் தொடங்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக முக்கிய அணிகள் எல்லாம் தயாராகி வருகின்றன. மும்பையில் நேற்று நடைபெறும் தேர்வுக் குழு‌ உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

மீண்டும் அணியில்...

இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பந்தை சேதப்படுத்திய புகாரில் விளையாட தடை விதிக்கப்பட்ட வார்னரும், ஸ்மித்தும் அணியில் இடம்பெறுவார்களா என்ற கேள்வி எழுந்த நிலையில் அவர்கள் இருவருமே இடம் பிடித்துள்ளனர்.

ஆஸி. வீரர்கள்: பின்ச் (கேப்டன்), வார்னர், ஸ்மித், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், ரிச்சர்ட்சன், நாதன் கவுல்டர் நைல், பெகண்ட்ரோஃப்,  நாதன் லயன், பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஆடம் சம்பா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம் பெறவில்லை.

ஆஸ்திரேலிய அணி ஃபார்மில் உள்ள நிலையில் வார்னர் மற்றும் ஸ்மித்தின் வருகை அந்த அணிக்கு மேலும் பலமாக இருக்குமென கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து