15 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து ஐதராபாத், டெல்லியிடம் சரண்டர்

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2019      விளையாட்டு
Delhi 2019 04 15

Source: provided

ஐதராபாத் : ஐதராபாத் அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி 39 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

49 ரன்கள்

ஐபில் தொடரில், நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் டெல்லி கேட்பிடலஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிருத்வி ஷா 4 ரன்னிலும் ஷிகர் தவான் 7 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். அடுத்து ஜோடி சேர்ந்த முன்றோ மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்தனர். முன்றோ 3 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷாப் பன்ட் சற்று நிதானமாக ஆடினர். இதனால் டெல்லி 16 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. ஐயர் 5 பவுண்டரிகளுடன் 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து புவனேஸ்வர்குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து ரிஷாப் பன்ட்டும் 19 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் கடைசி 4 ஒவர்களில் டெல்லி அணி வெறும் 28 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இறுதியில் அக்சர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 11 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

டெல்லி அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணி சார்பில் கலீல் அகமது மூன்று விக்கெட்டுகளையும் புவனேஷ்வர்குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

டெல்லி வெற்றி...

பின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணியில் டேவிட் வார்னரும் பேர்ஸ்டோவும் அருமையானத் தொடக்கம் தந்தனர். இவர்கள் ஆடியதைப் பார்த்தபோது ஐதராபாத் அணி வெற்றி பெற்றுவிடும் என்றே தோன்றியது. ஆனால், பேர்ஸ்டோவ் 41 ரன்னிலும் டேவிட் வார்னர் 51 ரன் எடுத்தும் ஆட்டமிழக்க, போட்டி தலைகீழானது. அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் உட்பட யாருமே ஒற்றை இலக்க எண்ணைத் தாண்டவில்லை. வெறும் 15 ரன் சேர்ப்பதற்குள் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த அணி 18.5 ஓவர்களில் 116 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 39 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு 03.06.2020 | Coronavirus Update Tamil Nadu District Wise

கறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US

மலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி

Sylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

டம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி? | Ravindran Duraisamy Exclusive Interview

Health mix for babies | Mixed Nuts Powder | Protein powder for kids

Egg Malai Masala | Easy step by step recipe

Caramel Pudding with Azhagu Serial Actress Sahana Shetty | நடிகை சஹானா ஷெட்டியின் கேரமல் புட்டிங்

ஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1

Chicken Chukka Chettinad Style | How to make Chicken Curry | செட்டினாட் சிக்கன் சுக்கா

Easy Wheat Biscuit recipe | Crispy & Crunchy Snacks | Ladies Glitz

Chicken 65 recipe | Authentic Indian recipes | Ladies Glitz

Vegetable Cutlet | Crunchy & Crispy Recipe by Ladies Glitz

Chocolate Milkshake | Banana Milkshake | Easy & yummy tasting milkshake recipes

Easy art & craft using Egg shells & Newspaper | Art from waste material to useful | Home decor ideas

Chapathi Veg Roll | Kids Veg Wrap | Ladies Glitz

Easy idli podi recipe | Idli milagai podi in tamil | இட்லி பொடி | Milagai podi recipe

Snack ideas for children | கடலைமாவு முட்டை ஆம்லெட் | Everyday snacks recipe -1

Ghee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து