முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரீசின் புகழ் பெற்ற தேவாலயத்தில் தீ விபத்து: பிரதான ஊசி கோபுரம் இடிந்து விழுந்தது

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2019      உலகம்
Image Unavailable

பாரீஸ், பிரான்சில் வரலாற்று சின்னமாக விளங்கும் தேவாலயத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் மேற்கூரை மற்றும் பிரதான ஊசி கோபுரம் இடிந்து விழுந்தது

பிரான்ஸ் தலைநகர், பாரிசில் அமைந்துள்ள 850 வருட பழமையான தேவாலயம் நோட்ரே டேம் கதீட்ரல். பாரம்பரிய சின்னமாக திகழும் இந்த தேவாலயத்தில், உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தால் இந்த தேவாலயத்தின் மேற்கூரை பற்றி எரிய ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக பரவிய தீ, தேவாலயம் முழுவதையுமே ஆக்கிரமித்து மேற்கூரை இடிந்து விழுந்தது.

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடினர். குறிப்பாக பிரதான சின்னமாக கருதப்படும் ஊசி கோபுரத்தை பாதுகாக்க தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், அந்த கோபுரம் முற்றிலும் எரிந்து இடிந்து விழுந்தது.

ஐரோப்பியர்களின் கட்டிடக் கலைக்கு உதாரணமாக திகழ்ந்துவந்த இந்த பழமையான தேவாலயம் தீக்கிரையானது அந்நாட்டு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்புகள் குறித்தோ, தீயில் சிக்கி யாரேனும் தவிக்கிறார்களா என்பது குறித்தோ விவரங்கள் வெளியாகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து