முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுக்கு செல்லாதீர்கள் மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது.

பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்வது குறித்து அமெரிக்க அரசு, புதிய பயண அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த பயண அறிவுறுத்தலில்,

பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பதற்றம் நிறைந்த பகுதிகள் வகைப்படுத்தப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளது. இந்த பட்டியலில் பாகிஸ்தானை பொதுவாக அபாயம் நிறைந்த 3-வது நிலையில் வைத்துள்ளது.

பயங்கரவாத தாக்குல்கள் நடத்தும் அபாயம் உள்ளதால் பொதுவாக பாகிஸ்தானுக்கு செல்லும் பயணத் திட்டங்களை அமெரிக்க மக்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக, மிகவும் அபாயகரமான தாக்குதல் நடக்கும் பகுதிகளான பலூசிஸ்தான், கைபர் பாக்துன்க்வா மாகாணம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியா - பாகிஸ்தான் எல்லை உள்ளிட்ட இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என வெளியுறவுத்துறை தனது பயண அறிவுறுத்தலில் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து