பயங்கரவாதத்தை பிடுங்கி எறியும் ஆற்றல் படைத்தவர் பிரதமர் மோடி: நிர்மலா சீதாராமன் புகழாரம்

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2019      இந்தியா
Nirmala Sitharaman 2019 01 23

சிவமொக்கா, பிரதமர் மோடியால் நாட்டின் பாதுகாப்பு உயர்ந்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

கர்நாடகத்தில் 2-வது கட்டமாக தேர்தல் நடக்கும் 14 தொகுதிகளில் சிவமொக்காவும் ஒன்று. அந்த தொகுதியில் பா.ஜ.க. முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனும், தற்போதைய எம்.பி.யுமான ராகவேந்திரா மீண்டும் போட்டியிடுகிறார். ராகவேந்திரா எம்.பி.யை ஆதரித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  சிவமொக்கா டவுனில் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் அப்பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு நிர்மலா சீதாராமன் பேசும் போது கூறியதாவது:-
மோடி நமது நாட்டிற்கு பிரதமராக கிடைத்து உள்ளார்.

நமது நாட்டின் பெருமை, வலிமை, பொருளாதார வளர்ச்சி எப்படி உயர்ந்து உள்ளதோ அதுபோல நாட்டின் பாதுகாப்பும் பல மடங்கு உயர்ந்து உள்ளது. கிராமப்புறங்களில் கழிவறை கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. 70 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா அடையாத வளர்ச்சி, மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் வளர்ச்சி அடைந்து உள்ளது. மீண்டும் மோடி பிரதமரானால் 2022-ம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரம் இரட்டிப்பாகும். 2047-ம் ஆண்டில் நாடு முன்னேறிய நாடுகளில் முதல் இடத்தை பிடிக்கும். பயங்கரவாதத்தை பிடுங்கி எறியும் ஆற்றல் படைத்தவர் மோடி. இந்த தேர்தலில் சிவமொக்கா தொகுதியில் போட்டியிடும் ராகவேந்திராவை வெற்றி பெற செய்வதன் மூலம் மோடியின் கரத்தை நாம் அனைவரும் பலப்படுத்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து