சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார் சத்ருகன் சின்கா மனைவி பூனம்: ராஜ்நாத்சிங்கை எதிர்த்து போட்டியா?

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2019      இந்தியா
Samajwadi Party joined Shatrughan Sinha wife 2019 04 16

லக்னோ, சத்ருகன் சின்காவின் மனைவி பூனம் சின்கா நேற்று சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்.

நேற்று காலை பா.ஜ.க. தொண்டர்களுடன் பேரணியாக சென்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்ட கலெக்டரிடம் தனது வேட்பு மனுவை ராஜ்நாத் சிங் தாக்கல் செய்தார். லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதே போல் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கூட்டணி சார்பிலும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

பிரபல பாலிவுட் நடிகரும் சமீபத்தில் பா.ஜ.க.வில் இருந்து விலகிய பாட்னா சாகிப் தொகுதி எம்.பி.யுமான சத்ருகன் சின்காவின் மனைவி பூனம் சின்கா லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து போட்டியிடும் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்படலாம் என முன்னர் சில தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், லக்னோ நகரில் உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் சிங் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் முன்னிலையில் சத்ருகன் சின்காவின் மனைவி பூனம் சின்கா நேற்று சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார். விரைவில் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளராக பூனம் சின்கா அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து