நாட்டை காக்க வந்த கை அல்ல-முன்னேற்றத்தை அழிக்க வந்த கை : பிரதமர் மோடி ஆவேச பேச்சு

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2019      இந்தியா
pm modi talk 2019 04 10

Source: provided

ராய்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில்  பேசிய பிரதமர் மோடி, தேர்தல் முடிவுக்கு பின்னர் மத்தியில் மீண்டும் ’மோடி சர்க்கார் அமையும்’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.    

பிரதமர் நரேந்திர மோடி சத்தீஸ்கர் மாநிலத்தின் கோப்ரா மாவட்டத்தில்  நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

நக்சலைட்களுடன் தொடர்பு வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி தற்போது நாட்டை துண்டாட துடிக்கும் சில சக்திகளுடன் உறவு வைத்திருப்பதாக தனது உரையில் மோடி குறிப்பிட்டார்.

எல்லா திருடர்களின் கடைசி பெயரும் மோடி என்றே முடிவது ஏன்? என சமீபத்தில் கேள்வி எழுப்பிய ராகுல் காந்தியை குறிப்பிட்டு பேசிய அவர் இதைப்போல தரக்குறைவாக பேசும் ஒருவர் எப்படி ஒரு மிகப்பெரிய கட்சியின் தலைவராக இருக்க முடியும்? என்று பதில் கேள்வி எழுப்பினார். 

இவர்களை பொருத்தவரை பெயரின் பின்னால் மோடி என்றிருப்பவர்கள் எல்லாம் திருடன் என்றால், இது எந்தவகையான அரசியல்?. வெறும் கைத்தட்டல்களை வாங்குவதற்காகவும் என்னை கேவலப்படுத்துவதற்காகவும் ராகுல் காந்தி இப்படி பேசி வருகிறார். 

காங்கிரஸ் கட்சியின் சின்னமான கை இந்த நாட்டை காக்க வந்த கை அல்ல. நாட்டின் முன்னேற்றத்தை அழிக்க வந்த கை. நமது பாதுகாப்பு படைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பறிக்க வேண்டும் என்று முயற்சித்துவரும் கை என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.   

அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் முடிந்து மே 23-ம் தேதி முடிவுகள் வெளியான பின்னர் மத்தியில் மீண்டும் ’மோடி சர்க்கார் அமையும்’ எனவும் மோடி நம்பிக்கை தெரிவித்தார். 

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து