தல டோனியின் ஸ்டைலை பின்பற்றும் ரோகித் சர்மா

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2019      விளையாட்டு
Roghit Sharma 2019 04 16

Source: provided

மும்பை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனியின் ஸ்டைலை, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அப்படியே பின்பற்றுகிறார்.

முன்னேற்றம்...

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் களைகட்டி வருகிறது. டோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 14 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது.டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 10 புள்ளிகளுடன் 2-வது மற்றும் 3-வது இடங்களில் உள்ளன. நேற்று முன்தினம் நடந்த போட்டியில் பெங்களூருவை வீழ்த்தி மும்பை அணி பட்டியலில் முன்னேற்றம் கண்டது.

ஆலோசனை...

டோனியைப் பொறுத்தவரை, போட்டி முடிந்ததும் எதிரணியின் இளம் வீரர்களுக்கு இக்கட்டான சூழலில் எப்படி செயல்பட வேண்டும் என அறிவுரை கூறுவது வழக்கம். அவரின் முக்கியமான ஆலோசனை கேட்க நிறைய வீரர்கள் விரும்புவர். இந்நிலையில், டோனியின் பாணியை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் பின்பற்றத் தொடங்கியுள்ளார்.

நேற்று முன்தினம் போட்டி முடிந்ததும், பெங்களூரு அணியின் இளம் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு, ரோகித் சர்மா ஆலோசனை வழங்கினார். இந்த வீடியோ, மும்பை இந்தியன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து