வேலூர் தொகுதியில் இடைத்தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும்: தேர்தல் அதிகாரி தகவல்

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2019      தமிழகம்
Satyabrata Sahu1  2019 03 31

சென்னை, வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். ரத்து செய்யப்பட்டுள்ள வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் மீண்டும் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். வருமானவரித்துறை மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி போலீசார் அளித்த அறிக்கை அடைப்படையில் வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சத்யபிரத சாகு பேட்டியளித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து