ஜனாதிபதி, எம்.பி.க்களை தேர்வு செய்ய இந்தோனேசியாவில் பொதுத்தேர்தல் - ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2019      உலகம்
Indonesia election 2019 04 17

ஜகார்தா : இந்தோனேசியாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்

இந்தோனேசியாவில் நேற்று மிகப்பெரிய பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. முதல் முறையாக, ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படுகிறது. உள்ளூர் நேரப்படி நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

அடுத்த 2024-ம் ஆண்டு வரையிலும் நாட்டை ஆளப் போகும் ஜனாதிபதி மற்றும் எம்.பி.க்களை 19 கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர். 8 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி ஜோகோ விடோடோவும், முன்னாள் ராணுவ தளபதி  பிரபோவோ சுபியாண்டோவும் போட்டியிடுகின்றனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து