முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளியில் ஓராண்டு காலம் தங்கும் அமெரிக்க வீராங்கனை

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2019      உலகம்
Image Unavailable

மாஸ்கோ, விரைவில் விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்ல உள்ள அமெரிக்க விண்வெளி வீராங்கனை கிறிஸ்டீனா கூக், விண்வெளியில் ஓராண்டு காலம் தங்கியிருந்த வீராங்கனை என்ற பெருமையை பெற உள்ளார்.

அமெரிக்கா, ரஷ்யா உள்பட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. அந்த மையத்தில் 6 வீரர்கள் தங்கி தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் 3 பேர் 5 அல்லது 6 மாதங்கள் அங்கு தங்கி விட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள். அதன் பின்னர் புதிதாக 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

அந்த வகையில், ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸ் சார்பில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர், இத்தாலியை சேர்ந்த லூகா பர்மிடானோ ஆகிய 2 வீரர்களும், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டீனா கூக் என்கிற வீராங்கனையும் வருகிற ஜூலை மாதம் 20-ம் தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்கிறார்கள். சோயூஸ் எம்-13 விண்கலத்தில் செல்லும் இவர்கள் கூடுதல் ஆராய்ச்சி பணிக்காக 11 மாதங்கள் அல்லது 392 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்து விட்டு பூமி திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக காலம் விண்வெளியில் தங்கியிருந்த வீராங்கனை என்ற சாதனையை கிறிஸ்டீனா கூக் படைக்கப் போகிறார். இதற்கு முன், அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீராங்கனை பெக்கிவிட்சன், அதிகபட்சமாக 289 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து