முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா கம்பம் நடும் விழா

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2019      தேனி
Image Unavailable

 

தேனி - தேனி அருகே வீரபாண்டியில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கௌமாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி, காவடி, ஆயிரம் கண்பானை, மாவிளக்கு, கரகம் போன்ற தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற நேர்த்தி கடன் செலுத்துவார்கள். வீரபாண்டி சித்திரைத் திருவிழாவை காண தேனி மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்தாண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கம்பம் நடும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்காக காலையில் முல்லை பெரியாற்றில் வைத்து கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் கோவிலுக்குள் அமைந்துள்ள அதற்கான பீடத்தில் கம்பம் நடப்பட்டது. இதனை தொடர்ந்து கம்பத்திற்கு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கம்பத்திற்கு பக்தர்கள் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டு வருகின்றனர். இவ்விழாவில் தேனி பாராளுமன்ற வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். மேலும் இத்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தையும் துவக்கி வைத்தார். இவ்விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.கணேசன்,இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் சிவலிங்கம் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், கோவில் பணியாளர்கள் பேரூராட்சி பணியாளர்கள் செய்து வருகின்றனர். இத்திருவிழாவிற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து