முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் நகரில் நடைபெற்ற மீனாட்சிஅம்மன் திருக்கல்யாண வைபவம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமிதரிசனம்:

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- திருமங்கலம் நகரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீமீனாட்சிசொக்கநாதர் கோவிலில் மீனாட்சிஅம்மன் திருக்கல்யாண வைபவம் நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது.இதில் பல்லாயிரணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் உசிலம்பட்டி சாலையில் பாண்டியமன்னர் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீமீனாட்சிசொக்கநாதர் கோவில் உள்ளது.இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் மீனாட்சிஅம்மன் திருக்கல்யாண வைபம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.மதுரை மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் செய்து அனுப்பியதால் திருமங்கலம் என்று பெயர்பெற்ற இங்கு நேற்று காலை மீனாட்சிதிருக்கல்யாண வைபவம் வெகுசிறப்பாக நடைபெற்றது.இதற்கென கோவிலிலுள்ள மணமண்டபம் பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.இந்த மணமேடையில் பெருமாளும், பிரியாவிடையும்,சுவாமியும்,மீனாட்சிஅம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.அப்போது அம்மன் பச்சைப்பட்டுத்தியும்,சொக்கநாதர் வெண்ணிற பட்டுத்தியும் சர்வ அலங்காரத்துடன் காட்சிதந்தனர்.பின்னர் சங்கரநாராயணபட்டர் சொக்கநாதராகவும், சங்கர்  பட்டர் மீனாட்சி அம்மனாகவும் வேடம் அணிந்து திருக்கல்யாணம் வைபவத்தை நடத்தினார்கள். அப்போது வேதவிற்பன்னர்கள் அக்னி ஹோமம் வளர்த்து,வேதமந்திரங்கள் முழங்கிட மேளதாளத்துடன் சுவாமி, மீனாட்சிஅம்மனுக்கு திருமாங்கல்யநாணை அணிவித்திட திருக்கல்யாணம் வெகுசிறப்பாக நடந்தேறியது.அந்நேரம் சுமங்கலி பெண்கள் தங்களது தாலிகளை புதிதாக மாற்றி கட்டிக்கொண்டனர்.
மீனாட்சி திருக்கல்யாணம் முடிந்து சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்திய பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மொய் எழுதிடும் நிகழச்சி நடைபெற்றது.இதையடுத்து பக்தர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு   அறுசுவை அன்னதானம் கோவில் சார்பாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்களின் வசதிக்காக கோவிலின் வெளிப்புறம் சிறப்பு பந்தலும்,பக்தர்களின் தாகம் தீர்த்திட நீர்,மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தது.மேலும் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாத பொருட்கள் வழங்கப்பட்டது.அதே சமயம் கோவில் அமைந்துள்ள உசிலம்பட்டி சாலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து