பாராளுமன்ற தேர்தல் ரத்து எதிரொலி: குடியாத்தம் - ஆம்பூர் தவிர்த்து வேலூரில் அரசு விடுமுறை ரத்து

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2019      தமிழகம்
TN assembly 2018 10 12

சென்னை : வேலூர் நாடாளுமன்றத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதைத்தொடர்ந்து அங்கு இன்று அரசு விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது,

தமிழகத்தில் 39 நாடாளுமன்றத்தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலோடு சேர்த்து 18 தொ்குதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கிடையில் வேலூர்நாடாளுமன்றத்தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் தொடர்பான இடங்களில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் 11.53 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது,. இதைத்தொடர்ந்து திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் வருமானவரித்துறை, காவல்துறை மற்றும் தேர்தல் கமிஷன் ஆகியவை அளித்த அறிக்கையின் அடிப்படையில் வேலூர் எம்.பி தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

நாடாளுமன்றத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் அம்மாவட்டத்தில் உள்ள தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவாளர்களால் காலியான குடியாத்தம், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் இன்று நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் வேலூர் பாராளுமன்றத் தேர்தலையொட்டி அங்கு அறிவிக்கப்பட்ட அரசு விடுமுறையை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக வேலூர், கே.வி.குப்பம், (தனி)அணைக்கட்டு, வாணியம்பாடிஆகியதொகுதிகளில் இன்று அரசு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து