முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாரிசு அரசியலால் பல்வேறு மாநிலங்களில் வளர்ச்சி- வாக்களித்த பின் குமாரசாமி பேட்டி

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூர் : கர்நாடக மாநிலத்தில் தனது வாக்கை பதிவு செய்த முதல்வர் குமாரசாமி, வாரிசு அரசியலால் பல்வேறு மாநிலங்களில் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக கூறினார்.    

பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. தமிழகம், புதுவை, கர்நாடகம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு நேற்று காலை தொடங்கி நடைபெற்றது. வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வத்துடன் சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

அவ்வகையில், கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி ராமநகரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவருடன் அவரது மனைவி அனிதா குமாரசாமி, அவரது மகனும் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளருமான நிகில் ஆகியோரும் வாக்களித்தனர். 

வாக்களித்த பின்னர் குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

 “வாரிசு அரசியல் இப்போது முக்கிய பிரச்சனை அல்ல. நாட்டின் பிரச்சனைகள்தான் பிரதானம். வாரிசு அரசியல் மற்றும் பிராந்திய அரசியலால் மட்டுமே பல்வேறு மாநிலங்களில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் பா.ஜ.கவின் விமர்சனங்களை கண்டுகொள்வதில்லை” என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து