சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரிசையில் நின்று வாக்களித்தார்

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2019      தமிழகம்
cm edapadi voting 2019 04 18

சேலம் : சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிலுவம்பாளையத்தில் நேற்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாக்கினை பதிவு செய்தார்.

மக்கள் ஆர்வம்

தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைதேர்தலுக்கான தேர்தலும் நேற்று நடந்தது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணி முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு சென்று வரிசையில் நின்று தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். முதன் முறையாக இளம் தலைமுறை வாக்காளர்கள் மிகவும் ஆர்வமுடன் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது வாக்கினை அளித்தனர்.

முதல்வர் வாக்களித்தார்

சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. இதில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். சேலம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட எடப்பாடியில் முதல்வர் பழனிசாமி அவருடைய சொந்த கிராமமான சிலுவம் பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார். காலை 7.40 மணியளவில் தனது வீட்டில் இருந்து நடந்த வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரிசையில் மக்களோடு மக்களாக நின்று காலை 7.49 மணிக்கு தனது வாக்கினை பதிவு செய்தார்.

சபாநாயகர் வாக்களிப்பு

இதே போல் தமிழக சபாநாயகர் தனபால், சேலம் மாநகரம் குகை தாதகாப்பட்டியில் உள்ள மாநகராட்சி உள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் உடன் வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.. இதே போல் சேலம் அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணன் காலை 9.30 மணிக்கு சேலம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு சாவடியில் தனது குடும்பத்துடன் வாக்கினை பதிவு செய்தார். இதே போல் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி. வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. சூரமங்கலம் புதுரோடு பகுதியில் உள்ள பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.  சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.சக்திவேல் அம்மாபேட்டை பகுதியில் உள்ள பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார். இதேபோல சேலம் மாவட்ட கலெக்டர் ரோஹிணி, மாநகராட்சி ஆணையாளக் ரெ. சதீஷ் ஆகியோரும் வாக்காளர்களுடன் வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர்.

சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 3288 வாக்குச் சாவடிகளில் 14 லட்சத்து 47 ஆயிரத்து 720 ஆண் வாக்காளர்களும் 14 லட்சத்து 47 ஆயிரத்து 192 பெண் வாக்காளர்களும் 135 இதர வாக்காளர்கள் உட்பட மொத்தம் 28 லட்சத்து 94 ஆயிரத்து 597 வாக்காளர்கள் உள்ளனர்.

பாதுகாப்பு...

சேலம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் 15 ஆயிரத்து 754 அரசு அலுவலர்கள் ஈடுப்பட்டனர். மேலும் 243 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் பதற்றமான வாக்குச் சாவடிகளில் 243 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதோடு வெப்கேமரா மூலம் பதட்டமான வாக்குச் சாவடிகள் அனைத்தும் இணையதளம் வழியாக நேரடியாக கண்காணிக்கப்பட்டது. 

குறிப்பாக கிராமப்புற வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் முதியோர்களே முன்கூட்டியே வந்திருந்து காத்திருந்து ஆர்வத்துடன் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து