உலக கோப்பைக்கான இந்திய அணியின் காத்திருப்போர் பட்டியலில் ரிஷப் பந்த், ராயுடு சேர்ப்பு - பி.சி.சி.ஐ. அறிவிப்பு

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2019      விளையாட்டு
Ambati Raydu 2019 04 18

புதுடெல்லி : உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் காத்திருப்போர் பட்டியலில் ரிஷப் பந்த் மற்றும் அம்பத்தி ராயுடு சேர்க்கப்பட்டுள்ளனர்.

காத்திருப்போர்...

இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ரிஷப் பந்த் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் சேர்க்கப்படாதது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

மாற்று வீரராக...

ரிஷப் பந்த் மற்றும் ராயுடுவோடு வேகபந்து வீச்சாளர் நவ்தீப் சைனியின் பெயரும் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணியில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டோ அல்லது வேறு காரணத்தினாலோ அணியில் இருந்து நீக்கப்பட்டால் இந்த மூவரில் ஒருவர் அணியில் சேர்க்கப்படுவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து