முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனி அடுத்த போட்டிக்கு தயாராகிவிடுவார்: ரெய்னா

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

சென்னை : சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக விளையாடாத எம்எஸ் டோனி அடுத்த போட்டிக்கு தயாராகிவிடுவார் என்று ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கேப்டனாக...

ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டி தொடங்குவதற்கு சற்று முன் எம்எஸ் டோனி விளையாடமாட்டார். ரெய்னாதான் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர், முகுது வலி காரணமாக டோனி பங்கேற்கவில்லை என தகவல் வெளியானது. டோனி இல்லாத இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியை சந்தித்தது.

ரெய்னா நம்பிக்கை...

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆர்சிபி-க்கு எதிரான போட்டியில் டோனி பங்கேற்பார் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரெய்னா கூறுகையில் ‘‘டோனி சிறப்பாக இருப்பதாக உணர்கிறார். அவரது முதுகு வலி சரியாகிவிட்டது. இதனால் அடுத்தப் போட்டியில் அவர் விளையாடுவார்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து