முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரமக்குடி சித்திரை திருவிழாவில் சுந்தரராஜபெருமாள் மஞ்சள் பட்டுத்தி கள்ளழகர் திருகோலத்துடன் வைகை ஆற்றில் இறங்கினார்

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

 பரமக்குடி - :பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோவிலின் சித்திரைத் திருவிழா, கடந்த 15 ந்தேதி காப்புக் கட்டுடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய விழாவாக நேற்று  வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்ட பூப் பல்லக்கில் சுந்தரராஜப் பெருமாள் மஞ்சள் பட்டுத்தி வெள்ளி கிண்ணத்தில் பால் பாயசம் சாப்பிட்டு கள்ளழகர் திருக்கோலத்துடன் நூற்றுக்கணக்கான தீவட்டிகள் மற்றும் வான வேடிக்கைகள் வெளிச்சத்தில் கோவிந்தா!  கோவிந்தா! என்ற பக்தர்களின் கோஷங்களுக்கிடையேயும், கள்ளழகர் வர்ணிப்பு பாடலுடன் நேற்று அதிகாலை 3.25மணிக்கு வைகையாற்றில் இறங்கினார். கள்ளழகர் மஞ்சள் பட்டுத்தி வைகையாற்றில் இறங்கியதன் மூலம் இந்தாண்டு நல்ல மழை பொழிந்து நாடு செல்வ செழிப்போடு விளங்கும் என்பது ஐதீகம்.
இந்நிகழ்ச்சியினை , பரமக்குடி, எமனேசுவரம், ராமநாதபுரம்,மதுரை,  இளையாங்குடி, திருச்சி, கும்பகோணம் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.தொடர்ந்து வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகர் ( பெருமாள்) பல்வேறு மண்டகப் படிகளுக்குச் சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தப் பின்பு,மேலச்சத்திரத்தில் அமைந்துள்ள தல்லாகுளம் மண்டகப் படியினை சென்றடைந்தார்.
அங்கு நேற்று காலை 9.15  மணிக்கு கோவிந்தா! கோவிந்தா!  என்ற பக்தர்களின் கோஷங்களுக்கிடையே கள்ளழகர் ( பெருமாள் ) , குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஆயிரக்கணக்கான  பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதுசமயம், நூற்றுக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பீச்சாங்குழல் என்னும் துரத்திகள் மூலம் மஞ்சள் நீரை பெருமாளுக்கு பீச்சி அடித்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து பல்வேறு மண்டகப் படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்த பெருமாள், நேற்று இரவு வண்டியூர் என்னும் காக்காத் தோப்பு மண்டகப் படியினை சென்றடைந்தார். அங்கு பெருமாளுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் மற்றும் விசேச தீபாரதணைகள் நடந்தன.
முன்னதாக, வைகையாற்று  பாலம் பகுதியில் இருந்து " ஆயிரம் பொன் " சப்பரம் என்னும் பெரிய தேரை நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து வைகையாற்று மணலில் கோவிந்தா! கோவிந்தா! என 2 கி.மீ.தூரம் இழுத்து வந்து காக்காத் தோப்பு மண்டகப் படியில் சேர்த்தனர்.விசேஷ தீபாரதணைகள் நடந்தன.
திருவிழாவை முன்னிட்டு பரமக்குடி டி.எஸ்.பி.சங்கர் தலைமையில் போலீசார்கள்,ஊர்க் காவல் படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.தொடர்ந்து இன்று  வைகையாற்றில் அமைந்துள்ள வாணிய உறவின் முறையார் மண்டகப் படியில் எழுந்தருளும் பெருமாளுக்கு விடிய விடிய தசாவதார காட்சிகள் நடக்கின்றன.
பின்பு 21,22 ம்தேதி பல்வேறு மண்டகப் படிகளில் பெருமாள் காட்சியளிக்கிறார். தொடர்ந்து 23 ம்தேதி காலை பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்ட பூ பல்லக்கில் நகருக்குள் எழுந்தருளி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.தொடர்ந்து அன்று மாலை கள்ளழகர் வர்ணிப்பு பாடல்களுடன் பெருமாள் கோவிலை சென்றடைகிறார். அங்கு அன்று இரவு கண்ணாடிசேவை நடக்கிறது.
தொடர்ந்து 25 ம்தேதி காலை  திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்துநேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.பின்பு பெருமாளுக்கு பக்தர்கள் செலுத்திய பாலினால் பாலாபிசேகம் நடக்கிறது.அன்றிரவு பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்ட பூப்பல்லக்கில் எழுந்தருளி நகரில் வீதிவலம் சென்று பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
திருவிழாவைத் தொடர்ந்து கோவில் முழுவதும் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு ஜொலிக்கின்றன. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை, கோவிலின் டிரஸ்டிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து