முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆல்ரவுண்டராக...

உலகக் கோப்பைக்கான இந்திய அணி கடந்த 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் அனுபவ வீரர் அம்பத்தி ராயுடு ஆகியோருக்கு அணியில் வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்திய அணியில் அம்பத்தி ராயுடுவிற்குப் பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  விஜய் சங்கர் தேர்வு குறித்து எம்.எஸ்.கே.பிரசாத் கூறுகையில், “சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு பிறகு நான்காவது இடத்திற்கு நிறைய வீரர்களை முயற்சித்து பார்த்தோம். அம்பத்தி ராயுடுவிற்கு சில வாய்ப்புகளை வழங்கினோம். நான்காவது இடத்திற்கு விஜய்சங்கர் பெயர் ஆலோசிக்கப்பட்டது. விஜய் சங்கர் ஆல்ரவுண்டராக பேட்டிங், பவுலிங், பீல்டிங் ஆகிய முப்பரிமாணங்களிலும்(3டி) சிறப்பாக செயல்பட்டார்” என்று தெரிவித்தார்.

தேவையில்லை...

இதனையடுத்து எம்.எஸ்.கே.பிரசாத் விஜய் சங்கர் பற்றிக் கூறியதை கேலி செய்யும் விதமாக ராயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “ “உலகக் கோப்பையை பார்க்க ‘3டி’ கண்ணாடிகள் வாங்குவதற்கு ஆர்டர் செய்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் வைரலாக ட்ரெண்டானது. இதற்கு பிசிசிஐ, “ராயுடு அணியில் இல்லாத ஏமாற்றத்தால் ஏற்பட்ட உணர்ச்சியின் வெளிப்பாடுதான் இந்த ட்வீட். அதனால் இதற்காக ராயுடு மீது எவ்வித நடவடிக்கையும் தேவையில்லை” எனத் தெரிவித்தது.

ஆதராவாக ட்விட்...

இந்நிலையில் ராயுடுவின் இந்த ட்வீட்டிற்கு ஆதரவு அளிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஒஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “ஹைதராபாத் வீரர்களின் நிலை எப்போதும் இதுதான். இது போன்ற சூழலில் நான் ஏற்கெனவே இருந்திருக்கிறேன். அதனால் உங்களுடைய உணர்ச்சியை என்னால் புரிந்துகொள்ள முடியும்” எனக் கூறியுள்ளார். இந்த ட்வீட் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு மீது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

113 விக்கெட்டுகள்...

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரக்யான் ஒஜா இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட போது அவர் சிறப்பான ஃபார்மில் இருந்தார். இந்திய அணிக்காக ஒஜா 24 டெஸ்ட் போட்டியில் விளையாடி 113 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அத்துடன் இவர் இந்திய அணிக்காக 18 ஒருநாள் போட்டியிலும், 6 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து