ராகுல், பிரியங்காவின் பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்து அசத்திய பெண்ணுக்கு வலைதளங்களில் பாராட்டு

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019      இந்தியா
translate women complimentary 2019 04 20

திருவனந்தபுரம் : காங்கிரஸ் தலைவர் ராகுல் பேச்சை மலையாளத்தில் மொழி பெயர்த்து பெண் மொழிபெயர்ப்பாளர் அசத்தினார்.

ஜோதி ராதிகா விஜயகுமார் என்ற பெண், வயநாடு தொகுதி பத்தனாபுரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுலின் ஆங்கிலப் பேச்சை மலையாளத்தில் மொழி பெயர்த்தார். அவரது துல்லியமான மொழிபெயர்ப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

ஏற்கனவே, ராகுலின் பேச்சை மொழிபெயர்த்த மூத்த தலைவர் பி.ஜே. குரியன் சொதப்பியதோடு, அது பெரும் காமெடியாக மாறிப்போனது. முன்னதாக தமிழகத்தில் கன்னியாகுமரியில் தங்கபாலு, கிருஷ்ணகிரியில் பேராசிரியர் பழனித்துரை ஆகியோரின் மொழிபெயர்ப்பும் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்த நிலையில் ஜோதியின் மொழிபெயர்ப்பால், கேரள காங்கிரசார் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஜோதிராதிகா, வழக்கறிஞர் மற்றும் திருவனந்தபுரம் ஐ.ஏ.எஸ்., அகாடமியில் சமூகவியல் பேராசிரியர். அவரது சிறந்த மொழிபெயர்ப்பை அடுத்து திருவனந்தபுரம் கூட்டத்தில் ராகுல் பேச்சை மொழிபெயர்க்கவும் காங்கிரசார் அழைத்துச்சென்றனர். நேற்று வயநாட்டில் பிரசாரம் செய்த பிரியங்காவின் பேச்சையும் அவரே மொழி பெயர்ப்பு செய்தார்.

கடந்தாண்டு கேரளா, செங்கனுார் எம்.எல்.ஏ., தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் விஜயகுமார் என்பவரது மகள் தான் இந்த ஜோதி. இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து