3-ம் கட்ட வாக்குப்பதிவு: 116 பார்லி. தொகுதிகளில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019      இந்தியா
Parliamentary election announce 2019 03 07

புது டெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கான 3-ம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு 116 தொகுதிகளில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது. கடைசி நாளான இன்று இறுதிக்கட்ட ஓட்டுவேட்டையை தலைவர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

116 தொகுதிகளில்...

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக கடந்த 11-ம் தேதி 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. 2-வது கட்டமாக தமிழகம், புதுவை உட்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 18-ம் தேதி நடந்தது. 3-வது கட்ட வாக்குப்பதிவு 12 மாநிலம் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் உள்ள 116 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. அதன்படி அசாமில் 4 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், சத்தீஷ்கரில் 7, குஜராத்தில் 26, கோவாவில் 2, ஜம்மு காஷ்மீரில் 1, கர்நாடகாவில் 14, கேரளாவில் 20, மராட்டியத்தில் 14, ஒடிசாவில் 6, உ.பி.யில் 10, மேற்கு வங்கத்தில் 5, தத்ரா நகர், சுவேலியில் 1, டாமன்டையூவில் 1 என 116 தொகுதிகளுக்கு நடக்கிறது.

23-ல் வாக்குப்பதிவு...

இந்த 116 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் உ.பி. மாநிலம் அமேதி, கேரள மாநிலம் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் நாளை மறுதினம் 23 -ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 3-வது கட்ட தேர்தலில் மொத்தம் 1594 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 21 சதவீத வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. காங்கிரஸ் கட்சியில் அதிகபட்சமாக 40 வேட்பாளர்கள் மீது வழக்குகள் உள்ளன. பா.ஜ.க. வில் 38 பேர் மீதும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியில் 11 பேர் மீதும் வழக்குகள் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து