தமிழகத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக தி.மு.க.வினர் மீது அதிக வழக்குகள் பதிவு

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019      தமிழகம்
Satyabrata Sahu  2019 03 31

சென்னை : தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 4690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தி.மு.க.வினர் மீது அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்  

தமிழகத்தில் 38 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  

1696 வழக்குகள் பதிவு...

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 4690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கு மண்டலத்தில் 941, மத்திய மண்டலத்தில் 712, வடக்கு மண்டலத்தில் 376 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கட்சிகள் அடிப்படையில் தி.மு.க. தரப்பினர் மீது 1695 வழக்குகளும், அ.தி.மு.க. தரப்பினர் மீது 1453 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.213.18 கோடி ரொக்கம், 2403 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்து. மேலும், ரூ.3.51 கோடி மதிப்பிலான மதுபானங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து