பெண்கள் குறித்து அவதூறு கருத்து: பாண்ட்யா, ராகுலுக்கு ரூ.20 லட்சம் அபராதம் - பி.சி.சி.ஐ நடவடிக்கை

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019      விளையாட்டு
Pandya-Rahul 2019 04 20

புதுடெல்லி : பெண்கள் குறித்து அவதூறாக கருத்துத் தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் விதித்து பி.சி.சி.ஐ நடவடிக்கை எடுத்துள்ளது.

இடைநீக்கம்...

இந்தி பட இயக்குனர் கரண் ஜோஹரின் `காஃபி வித் கரண்’ டிவி. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கிரிக்கெட் வீரர்கள் கே.எல்.ராகுலும் ஹர்திக் பாண்ட்யாவும் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினர். பெண்கள் குறித்து பேசும்போது, அவர்கள் ஆபாசமாகக் கருத்து தெரிவித்ததாக சர்ச்சை எழுந்தது. அவர்களுக்கு பிசிசிஐ நிர்வாகக் குழு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து தங்களின் பேச்சுக்கு இருவரும் மன்னிப்புக் கேட்டனர். அதை ஏற்காத இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி இருவரையும் இடைநீக்கம் செய்தது.

ரூ.20 லட்சம்...

இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தும் அதிகாரியாக, முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயினை உச்சநீதிமன்றம் நியமித்தது. அவர் இருவரிடமும் விசாரணை நடத்தினார்.  விசாரணை முடிந்து இருவருக்கும் ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

4 வாரத்துக்குள்...

தலா ஒரு லட்சம் ரூபாயை, பணியின் போது மரணமடைந்த துணை ராணுவப்படையினர் 10 பேரின் குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என்றும் மீதி ரூ.10 லட்சம் ரூபாயை, பார்வையற்றோர் கிரிக்கெட்டை பிரபலபடுத்துவதற்கான வைப்பு நிதியாக கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்னும் 4 வாரத்துக்குள் இந்த தொகையை அவர்கள் கொடுக்காவிட்டால், இந்திய கிரிக்கெட் வாரியம் அவர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து