நிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண்: கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூரு

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019      விளையாட்டு
bangalore win 2019 04 20

கொல்கத்தா : கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூர் அணி.

35-வது ஆட்டம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 35-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பார்தீவ் பட்டேல், விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். பார்தீவ் பட்டேல் 11 ரன்னிலும், அக்‌ஷ்தீப் நாத் 13 ரன்னிலும் அவுட்டாகினர்.

கோலி சதம்...

விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த மொயீன் அலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மொயீன் அலி 28 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 66 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். முதலில் நிதானமாக ஆடிய விராட் கோலி அரைசதம் கடந்ததும் அதிரடியில் இறங்கினார். கடைசி கட்டத்தில் சிக்சர், பவுண்டரியுமாக விளாசினார். விராட் கோலி 56 பந்தில் 4 சிச்கர், 9 பவுண்டரியுடன் சதமடித்து 100 ரன்னில் வெளியேறினார். இறுதியில், பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.

ரசல் அதிரடி...

இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. கிறிஸ் லின், சுனில் நரேன் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். கிறிஸ் லின் ஒரு ரன்னில் அவுட்டானார். சுனில் நரேன் 18 ரன்னிலும், ஷுப்மான் கில், ராபின் உத்தப்பா ஆகியோர் 9  ரன்னிலும் அவுட்டாகினர். நிதிஷ் ரானாவுடன் ஆண்ட்ரு ரசல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பெங்களூர் அணி பந்து வீச்சை வெளுத்து வாங்கியது. சிக்சர் மழையாக பொழிந்தது.

10 ரன் வித்தியாசத்தில்...

நிதிஷ் ரானா சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். ஆண்ட்ரு ரசல் அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அவர் 25 பந்தில் 65 ரன் குவித்து ஆட்டமிழந்தார். நிதிஷ் ரானா 46 பந்தில் 85 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். இறுதியில் கொல்கத்தா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பெங்களூர் அணி 10 ரன் வித்தியாசத்தில் வென்றது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து