மீண்டும் கேப்டனாகினார் ஸ்மித்

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019      விளையாட்டு
Steven Smith 2019 04 20

ஜெய்ப்பூர் : பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை பெற்ற ஸ்டீவ் ஸ்மித், மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

தொடருவார்...

ஜெய்ப்பூரில் நடந்த ஐ.பி.எல் தொடரின் 36-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு சீசனில் இனி வரும் போட்டிகளிலும் ஸ்மித் கேப்டனாக தொடருவார் என அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மீண்டும் கேப்டன்...

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித், பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. பந்தைச் சேதப்படுத்திய விவாகரத்தில் ஓராண்டு தடைபெற்ற ஸ்மித், அண்மையில் ராஜஸ்தான் அணியில் இடம்பிடித்தார். இந்நிலையில், அந்த அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்றுள்ளார். 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலும் ஸ்டீவ் ஸ்மித் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து