உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் விலகல் ?

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019      விளையாட்டு
Alex Hales 2019 04 20

லண்டன் : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியில் இருந்து முக்கிய வீரர் திடீரென விலகயிருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

அணி அறிவிப்பு

12-வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் ஆல் ரவுண்டர் விஜய் சங்கர், மூத்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

விலகல்...

இந்திய அணி அறிவிக்கப்பட்ட மறுநாள், இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட அணிக்கு இயான் மோர்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த அணி, ஆல்ரவுண்டர் அலெக்ஸ் ஹேல்ஸ் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில், திடீரென சொந்தக் காரணங்களுக்காக காலவரையின்றி கிரிக்கெட் போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளார். அலெக்ஸ் ஹேல்ஸ், இங்கிலாந்து அணிக்காக 70 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

குழப்பம்...

உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்குள் மீண்டும் அணிக்கு திரும்புவாரா மாட்டாரா என்பது குறித்த தகவலை அலெக்ஸ் ஹேல்ஸ் தெரிவிக்கவில்லை. இதனால், மாற்று வீரரை அறிவிக்கலாமா வேண்டாமா என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் குழப்பத்தில் உள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து