கொழும்பு நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: சுஷ்மா ஸ்வராஜ்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019      உலகம்
Sushma Swaraj 2019 04 21

கொழும்பு : கொழும்பு குண்டு வெடிப்பு நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அடுத்தடுத்து 6 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்ததையொட்டி, நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஓட்டல்களில் நேற்று காலை அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நிகழ்வு நடந்தது. இதில் ஏராளமானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இலங்கையில் உள்ள இந்திய தூதரிடம் நான் தொடர்ந்து பேசி அங்குள்ள சூழ்நிலையை குறித்து கேட்டு வருகிறேன். அங்குள்ள நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து