முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு: முல்லரின் முழு அறிக்கையை தாக்கல் செய்ய நாடாளுமன்ற நீதித்துறை குழு சம்மன் பிறப்பிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது தொடர்பாக நடத்திய ராபர்ட் முல்லர் தனது முழு அறிக்கையையும் தாக்கல் செய்ய அமெரிக்க நாடாளுமன்றத்தின் நீதித்துறை குழு சம்மன் பிறப்பித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், டிரம்புக்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரிக்க அமெரிக்காவின் பிரபல வக்கீலும், எப்.பி.ஐ முன்னாள் இயக்குனருமான ராபர்ட் முல்லர் நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த விசாரணை அறிக்கையின் சுருக்கம் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் ,முல்லரின் முழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தின் நீதித்துறை குழுவின் தலைவர் சம்மன் பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், டிரம்ப் மீதான பதவி நீக்க கோரிக்கையை மக்கள் ஆதரவில்லாமல் பரிசீலிக்க முடியாது என சபாநாயகர் நான்சி பெலோசி மறுத்து விட்டார். அதே நேரம், டிரம்ப் மீது பதவி நீக்க தீர்மான நடவடிக்கை கொண்டு வர வேண்டும் என செனட் உறுப்பினர்கள் எலிசபத் வாரென் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து