டோனி இல்லாமல் வெற்றி பெறுவது கடினம் - பயிற்சியாளர் பிளெமிங் கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019      விளையாட்டு
Dhoni-Fleming 2010 04 21

எம்எஸ் டோனி இல்லாமல் வெற்றி பெறுவது கடினம் என்று, அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. முதுகு வலி காரணமாக அவர் விலகி இருந்தார். இதனால் சென்னை அணிக்கு ரெய்னா கேப்டனாக செயல்பட்டார். ஐதராபாத்துக்கு எதிரான அந்த போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் தோல்வியை தழுவியது.இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 10-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் டோனி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் டோனி இல்லாமல் வெற்றி பெறுவது கடினம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் பிளெமிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

டோனி மிக சிறந்த வீரர். அவரைப் போன்ற வீரர் அணியில் விளையாட இயலாமல் போனால் அதை சரி கட்ட உங்களுக்கு மிகப்பெரிய வேலையாக இருக்கும். தற்போது அவர் சிறந்த பார்மில் உள்ளார்.இதனால் அணியில் சற்று பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும். ஆனாலும் அதை சரி கட்டுவது அவசியம். டோனி இல்லாமல் வெற்றி பெறுவது கடினமான விஷயம்தான். பெங்களூர் மைதானத்தில் நடக்கும் போட்டியில் அதிக ரன் குவிப்பு ஆட்டமாக இருக்கும் என்று கருதுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து