அந்த தருணத்தில் கண்ணீர் விட்டு அழுதேன் - ஆன்ட்ரூ ரஸல் நெகிழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019      விளையாட்டு
Andrew Russell 2019 04 21

கொல்கத்தா : கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் என்னை மீண்டும் சேர்த்த அந்த தருணத்தில் கண்ணீர் விட்டு அழுதேன் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஆன்ட்ரூ ரஸல் உருக்கமாகத் தெரிவித்தார்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் எக்ஸ் பேக்டர் வீரர் என்று மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் ஆன்ட்ரூ ரஸல் அழைக்கப்படுகிறார். இந்த ஐ.பி.எல் சீசனில் ரஸலுக்கென தனியாக ரசிகர்கள் கூட்டம் உருவாகி விட்டது. ரஸல் களமிறங்கிய பெரும்பாலான போட்டிகளில் எல்லாம் குறைந்த பந்துகளில் அதிகமான ரன்களை அணிக்காக சேர்த்துக் கொடுத்துள்ளார். குறிப்பாக சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 18 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து எளிதாக வெற்றி பெற வைத்தார். இது போல் பல போட்டிகளில் அணியின் ஸ்கோர் உயர்வுக்கும், வெற்றி பெறுவதற்கும் ரஸல் முக்கியக் காரணமாக அமைந்துள்ளார். இந்த சீசனில் இதுவரை 9 போட்டிகளில் ரஸல் 377 ரன்கள் சேர்த்து சராசரியாக 74 ரன்கள் வைத்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் அறிமுகமாகிய பின் இந்த முறை ரஸல் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் கே.கே.ஆர் அணிக்காக தான் நன்றிக் கடன்பட்டுள்ளதாகவும், அவர்களுக்காகவே சிறப்பான பங்களிப்பை அளிப்பதாக சமீபத்தில் ஒரு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் ரஸல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

கடந்த 2017-ம் ஆண்டு நடந்த 10-வது ஐ.பி.எல் போட்டியில் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் நான் சிக்கினேன். இதில் ஒரு ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் விளையாட எனக்கு தடை விதிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு என்னை ஐ.பி.எல். போட்டியில் சேர்ப்பார்களா, யார் ஏலத்தில் எடுப்பார்கள் என்ற வருத்தம் ஏற்பட்டது. என்னுடைய குடும்ப சூழல், பிரச்சினைகளை எவ்வாறு சமாளிக்கப் போகிறேன் என்று கண்கலங்கினேன். அப்போது, திடீரென எனது வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதை எடுத்துப் பேசினேன். மறுமுனையில் கொல்கத்தா அணியின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கி மைசூர் பேசினார். என்ன ரஸல் எப்படி இருக்கிறீர்கள் என்றார். நலமாக இருக்கிறேன் என்றேன் என்று கூறினேன். ஐ.பி.எல். ஏலத்தில் அணியில் இரு வீரர்களை மட்டும் தக்க வைத்துள்ளோம். அதில் இரு வீரர்களில் நீங்களும் ஒருவர். அணியில் கொல்கத்தா அணியில் தொடர்கிறீர்கள். கவலையை விடுங்கள் என்று கூறினார். இந்த வார்த்தையைக் கேட்டதும் நான் உடைந்து கண்ணீர் விட்டு அழுதேன். அணி நிர்வாகிகளுக்கு என்னுடைய குடும்பத்தின் சூழல் தெரியும். என் நிலைமை புரியும் என்பதால், எனக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தார்கள். அதனால்தான் என்னால் முடிந்த சிறப்பான பங்களிப்பை தொடர்ந்து கே.கே.ஆர். அணிக்காக அளித்து வருகிறேன். இவ்வாறு ஆன்ட்ரூ ரஸல் தெரிவித்தார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து