கோவில் திருவிழா நெரிசலில் உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. ஒரு லட்சம் - காயமடைந்தோருக்கு ரூ. 50 ஆயிரம்: முதல்வர் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019      தமிழகம்
cm edapadi 2019 03 03

சென்னை : திருச்சி மாவட்டம், துறையூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஏழு பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. ஒரு லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என்றுமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், 

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், முத்தையம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் திருக்கோயில் ஒன்றில் பிடிகாசு வழங்கும் நிகழ்வின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி கரூர் மாவட்டம், நன்னீயுரைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் லஷ்மிகாந்தன், கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்த கனகசபை என்பவரின் மகன் ராஜவேல், சேலம் மாவட்டம், திருமனூரைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி கந்தாயி, நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தைச் சேர்ந்த அப்பாசாமி என்பவரின் மனைவி சாந்தி, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையைச் சேர்ந்த ராமர், கடலூர் மாவட்டம், பின்னையாந்தூரைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் மனைவி பூங்காவனம் மற்றும் விழுப்புரம் மாவட்டம், பொன்பரப்பியைச் சேர்ந்த ரவி என்பவரின் மனைவி வள்ளி ஆகிய ஏழு நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஏழு நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட விபத்தில் 12 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் வருத்தமடைந்தேன். இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து